இரண்டாவது ஆப்பிள்
By எஸ்.எல்.வி.மூர்த்தி
First Published : 30 April 2012 12:55 AM IST
இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி; பக்.152; ரூ.75; விகடன் பிரசுரம், அண்ணாசாலை, சென்னை-2; )044- 4263 4283.
கம்ப்யூட்டர் உள்ளவரை தனது பெயரும் நிலைக்கும்வகையில் கம்ப்யூட்டரில் புதிய அறிமுகங்களைச் செய்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
1955-இல் பிறந்த அவருக்குக் கம்ப்யூட்டர் மேல் அதீத ஈடுபாடு ஏற்பட்டது. அதுவே அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்தது. எதிலுமே புதுமையை விரும்பியதால், ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கி சில ஆண்டுகளிலேயே அவருடைய 25-வது வயதிலேயே 265 மில்லியன் டாலருக்கு அதிபதியானார். ஆனாலும் அவர் துவங்கிய நிறுவனத்திலிருந்தே தூக்கி எறியப்பட்டார். தொடர் தோல்விகளுக்குப் பின் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் நுழைந்தார். முன்னர் பில் கேட்ஸýக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தோல்வியடைந்தபோதும், இப்போது அவருடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவருக்கு ஏறுமுகம்தான். இன்று சாமானியர்களும் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதற்கு காரணம் ஜாப்ஸ்தான்.
ஐமேக் கம்ப்யூட்டர், ஆப்பிள் ஸ்டோர்ஸ், ஐபாட், ஐட்யூன்ஸ், ஐபோன், ஐபேட் என அவரது தயாரிப்புகள் கொடிக் கட்டிப் பறந்தன. தனது பலவிதமான பலவீனங்கள், தோல்விகளை எல்லாம் வென்ற இந்த சாதனையாளர் யாரும் எதிர்பாராத வகையில் தனது 56-வது வயதில் (2011 அக்டோபர் 5) இயற்கை எய்திவிட்டார். சிறிய சோதனைகளுக்கே துவண்டுவிடுபவர்களுக்கு ஜாப்ஸின் வாழ்க்கை ஓர் அருமருந்து. இந்நூல் வெறும் வாழ்க்கை வரலாறு என்ற எல்லைக்குள் நின்றுவிடாமல், ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையினூடே இன்றைய தொழில், வணிகப் போட்டிகளில் நிலைத்து நிற்பதற்கான தந்திரங்கள், தோல்வியடைந்தாலும் கலங்காமல் வெல்லக் கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி, நிர்வாகத்தை நடத்திச் செல்வதற்கான சிறப்பான வழிமுறைகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள உதவுகிறது. புத்தகத்தை எடுத்தால் படித்து முடித்துதான் கீழே வைக்கும் அளவுக்கு விறுவிறுப்பான நாவல் போல அமைந்திருப்பது நூலின் சிறப்பு.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- ஐபிஎல் 6: சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்
- குறுவைச் சாகுபடி பொய்க்கும் அபாயம்: கருணாநிதி எச்சரிக்கை
- சென்னையில் பொறியாளர் வீட்டில் 35 பவுன் நகை திருட்டு
- ராமதாஸ் விரைவில் குணமடைய கருணாநிதி, அகிலேஷ் யாதவ் விருப்பம்: ஜி.கே.மணி
- போலி சான்றிதழை பயன்படுத்தி பதவி உயர்வு: வணிகவரித் துறை அலுவலர் மீது வழக்கு
- போலி ஆவணம் மூலம் ரூ.20 லட்சம் நில மோசடி: 3 பேர் கைது
- பணியாற்றும் தகுதி இருந்தால் மனைவியிடம் இருந்து கணவன் ஜீவனாம்சம் கோர முடியாது: உயர் நீதிமன்றம்
- ரெய்னா அதிரடி; இறுதிச்சுற்றில் சூப்பர் கிங்ஸ்
- சென்னையில் தொழில் அதிபர் தற்கொலை : குடும்பத்தாரும் மரணம்
- திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்கள் திடீர் மயக்கம்
- தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ.248 குறைந்தது
- புற்று - முற்றவிடக் கூடாது!
கருத்தை பதிவு செய்க