அன்பெனும் தோட்டத்திலே
By ஓஷோ
First Published : 26 March 2012 12:00 AM IST
அன்பெனும் தோட்டத்திலே - ஓஷோ; தமிழில்: வரலொட்டி ரெங்கசாமி; பக்.490; ரூ.250; கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044-2436 4243/ 2432 2177.
"அன்பு' இந்த மூன்று எழுத்துகளுக்குத்தான் எத்தனை வலிமை இருக்கிறது! அனைத்து மதங்களும் சமயங்களும் போதிக்கும் மந்திரம் அன்பு ஒன்றுதானே! ஆனால், மதங்களோ, சமயங்களோ நமக்குத் தேவையில்லை என்கிறார் தத்துவ ஞானி ஓஷோ. மதம் இந்த சமூகத்தைப் பீடித்த ஒரு நோய் எனவும், மதமே மனநோயின் மூலம் என்றும் கூறுகிறார். மெய்ப்பொருள் என்பது மூல உரு. அதை அடைய வேண்டுமானால், நீங்களும் மூல உருவாக இருக்க வேண்டும். போலிகளாக, வேஷதாரிகளாக, ஆஷாடபூதிகளாக இருந்தால் மெய்ப்பொருளை உணர முடியாது என்றும் கூறுகிறார்.
"அறிவு இல்லாதபோது அன்பு பிறக்கும். அறிவும் அன்பும் எதிர் துருவங்கள். அறிவு மிருந்திருக்கும் இடத்தில் அன்பு குறைந்துதான் இருக்கும். அன்பு மிகுந்தபோது அறிவைக் குறையச் செய்யும். அன்பு உங்களை ஞானியாக்கும். அறிவு ஒருபோதும் அன்பைக் கொடுக்காது. அன்பு என்னும் மலர் உங்கள் இதயத்தில் மலரும்போது அதன் வாசம் இறைவனின் திருவடி வரை செல்லும். அன்பு என்பது பரிபூரணத்துவத்துக்கு முகவரியிடப்பட்ட கடிதம். அன்பு ஒரு ரகசிய சாவி. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பூட்டுக்களையும் திறக்கக் கூடியது. எல்லாத் தடுப்புகளையும் தகர்க்கக் கூடியது' என்று நூல் முழுவதும் மனிதனைப் புனிதமாக்கும் அன்பு என்ற தாரக மந்திரத்தைப் பற்றிப் பத்துத் தலைப்புகளில் விரிவாக விளக்கியுள்ளார். சுருக்கமாக அவர் சொல்வது இதுதான் - ஒருவன் தன்னைத்தானே அன்பு செய்தால் - நேசித்தால்தான் அவன் இறைவனை அடையமுடியும் என்பதுதான். இன்றைய மாணவர்கள் நல்லொழுக்கம் பெற அவசியம் படிக்கவேண்டிய அன்பு நூல்.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- ஹீத்ரு விமான நிலைய ரன்வேக்கள் மீண்டும் திறப்பு
- குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை : இந்தியா சிமெண்ட்
- பிசிசிஐ தலைவர்: பதவி விலகுவார் சீனிவாசன்?
- தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை
- ஐபிஎல் போட்டி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றி ஆலோசனை
- சௌதி அரேபியாவில் இருந்து இந்தியா வர மேலும் 27,000 பேர் மனு
கருத்தை பதிவு செய்க