பாதாள சாக்கடை பணிகள் தாமதம்
By
First Published : 09 April 2012 01:51 AM IST
உள்ளகரம் புழுதிவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப் பகுதி மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பிறகாவது திட்டப் பணிகள் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இப்போதும் ஆமை வேகத்திலேயே பணிகள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் கழிவுநீர்க் கால்வாய்கள் திறந்தே காணப்படுகின்றன.
இதனால் கொசுத் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கொசு மருந்தடித்து கொசுத் தொல்லையைப் போக்க வேண்டும், வீதிகளில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் குப்பைகளை கூட்டி லாரிகளில் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஆ. கிருஷ்ணன், உள்ளகரம்.
இந்த பகுதியில் மேலும்
(Press Ctrl+g or click this
to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க