வீதிகளில் மேயும் மாடுகள்
By
First Published : 09 April 2012 01:51 AM IST
திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெரு பகுதியில் ஒரு சிலர் மாடு வளர்த்து வருகின்றனர். தினமும் காலை 6 மணி முதல் அங்குள்ள கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாடுகளை மேயவிடுகின்றனர்.
அருகில் உள்ள மார்க்கெட்டுக்குள் புகுந்துவிடும் இந்த மாடுகள், அங்குள்ள காய்கறிகளை சாப்பிட முயற்சிக்கின்றன. அதை வியாபாரிகள் விரட்டிவிடுகின்றனர். அப்போது மிரண்டு ஓடிவரும் மாடுகளால், பள்ளிக்குச் செல்லும் சிறுவர், சிறுமிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். சில சமயங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன.
இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாடுகளைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ். ரங்கநாதன், சென்னை.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன், ஸ்ருதிஹாசன் நெருக்கம்?
- பிரதமர் மன்மோகன் பற்றிய அடுத்த சர்ச்சை கிளம்பிவிட்டது
- கைக்குட்டை மூலம் சைகை! ஐபிஎல் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் விநோதம்!
- 32 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணையும் ஜோடி
- ஐபிஎல்.லில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் கைது
- மரியான் படத்துக்காக சிறுத்தையுடன் நடித்த தனுஷ்!
கருத்தை பதிவு செய்க