10 Feb 2010 12:32:27 AM IST
சிறுவர்களுக்கு வீதி நாடகப் பயிற்சி
புதுச்சேரி, பிப். 9: மெல்லிய பிளாஸ்டிக் பொருள்கள் தடை குறித்த வீதி நாடக பயிற்சி
திங்கள்கிழமை நடைபெற்றது.
÷புதுச்சேரி ஹோப் நிறுவனம் சார்பில் மெல்லிய பொருள்கள் மீதான புதுவை அரசின் தடை குறித்த வீதி நாடக பயிற்சி காலாப்பட்டில் நடைபெற்றது. ஹோப் நிறுவன இயக்குநர் பெ.ஜோசப் விக்டர் ராஜ் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.
÷50 மைக்ரான் தடிமன் மற்றும் 8ஷ்12 அங்குலத்திற்கு குறைவான பிளாஸ்டிக் தூக்கு பைகள், ஒரே முறை பயன்பாட்டு குவலைகள் உற்பத்தி செய்தல், விநியோகம் செய்தல் மற்றும் உபயோகித்தல் ஆகியவை புதுச்சேரியில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன.
÷இந்தப் பொருள்களை வாங்கினாலும், பயன்படுத்தினாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வீதி நாடகங்கள் நடத்த ஹோப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பயிற்சி காலாப்பட்டு நம்பிக்கை சமுதாயக் கூடத்தில் நடத்தப்படுகிறது.
÷சென்னை வீதி நாடகக் கலைஞர் கிருஷ்ணன் பயிற்சி அளிக்கிறார். இதில் காலாப்பட்டு, கனகசெட்டி குளம் கிராமங்களை சேர்ந்த 30 சிறார்கள் கலந்துகொண்டனர்