உணவுப் பணவீக்கம் 9.67% ஆகக் குறைவு
First Published : 30 Jul 2010 12:00:00 AM IST
Last Updated :
புது தில்லி, ஜூலை 29: உணவுப் பணவீக்கம் ஜூலை 17-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.67 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய வாரத்தில் 12.47 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.÷இந்த ஆண்டில் இப்போதுதான் உணவுப் பணவீக்கம் ஒற்றை இலக்க விகிதத்துக்குக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலைகள் குறைந்து காணப்பட்டன. ÷ரிசர்வ் வங்கியின் முதல் காலாண்டு கடன் கொள்கை வெளியான பிறகு உணவுப் பணவீக்கம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் விலை குறியீட்டெண் 12.29 சதவீதமாக உயர்ந்தது. முந்தைய வாரத்தில் இது 14.27 சதவீமாக இருந்தது. இதேபோல அடிப்படை பொருள் குறியீட்டெண் 14.50 சதவீதமாகக் குறைந்தது. முந்தைய வாரத்தில் இது 16.48 சதவீதமாக இருந்தது. ÷ஜூன் மாதத்துடன் முடிவடைந்த மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 10.55 சதவீதமாக இருந்தது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்குப் பிறகு பணவீக்க விகிதம் எந்த அளவுக்குக் குறைந்தது என்பது அடுத்த மாதம் தெரியும்.÷பணவீக்க விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு குறைந்து வருவதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர் கெüஷிக் பாசு தெரிவித்தார். 2009-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு தற்போதுதான் உணவுப் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு சரிந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். ÷இருப்பினும் கடந்த ஓராண்டில் பருப்பு விலை 21.23 சதவீதமும், பால் விலை 19.03 சதவீதமும், பழங்கள் விலை 12.14 சதவீதமும் உயர்ந்துள்ளது.÷உருளைக் கிழங்கு விலை 46 சதவீதமும், வெங்காயம் விலை 10 சதவீதமும் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக காய்கறிகள் விலை 14.77 சதவீதம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பணவீக்கம் கடந்த ஐந்து மாதங்களாக இரட்டை இலக்கத்திலேயே இருந்து வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் உணவுப் பணவீக்கம் 16 சதவீத அளவிலேயே இருந்தது. ஜூன் மாத பிற்பாதியில்தான் 13 சத அளவுக்குக் குறைந்தது. இந்த நிதி ஆண்டில் ஒட்டுமொத்த பணவீக்கத்தை 6 சதவீத அளவுக்குக் குறைக்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.