Wednesday, September 08, 2010 1:51 PM IST
Click
சென்னை
பெட்ரோல், டீசலுக்கு தமிழ்நாட்டில்தான் அதிக வரி: தே.மு.தி.க. குற்றச்சாட்டு

First Published : 30 Jul 2010 05:59:06 AM IST


எரிபொருள் விலை, அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்கக் கோரி சென்னை தாம்பரத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.கவினர்.
தாம்பரம், ஜூலை 29: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெட்ரோல், டீசலுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் எஸ்.ஆஸ்டின் குற்றம் சாட்டினார்.

÷சென்னை தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய ஆஸ்டின், இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில்தான் பெட்ரோல், டீசலுக்கு 30 சதவீதம்  வரி விதிக்கப்படுகிறது. அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் தமிழ்நாட்டில்தான் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது என்றார்.  

 ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் அனகை முருகேசன், நகரச் செயலர் வி.கண்ணையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்