தியாகராய நகரில் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்
First Published : 31 Jul 2010 01:28:43 AM IST
Last Updated :
சென்னை, ஜூலை 30: சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் 600 கிலோ சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மண்டலம்-8, உதவி சுகாதார அலுவலர் தலைமையில் சுகாதார ஊழியர்கள் தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் மேற்கொண்ட ஆய்வில் வடை, பஜ்ஜி, போண்டா, பாதாம் பால், சிப்ஸ், சுண்டல், காலிபிளவர் பகோடா, ஐஸ்கிரீம் போன்ற 600 கிலோ எடையுள்ள தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தரமற்ற 10 மூட்டை தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆய்வின்போது 25 கிரேடு தரமற்ற பாதாம்பால் மற்றும் உணவுப் பொருள்கள் வைப்பதற்காக வைக்கப்பட்ட சுகாதாரமற்ற பாத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்து தரமற்ற உணவுப் பொருள்களும் அழிக்கப்பட்டன. பொதுமக்கள் தரமற்ற உணவுப் பொருள்களை வாங்க வேண்டாம் என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.