Tuesday, February 09, 2010 6:55 AM IST
Click
சினிமா
பசங்க படத்துக்கு சர்வதேச விருது

First Published : 22 Nov 2009 01:42:15 AM IST


பாண்டிராஜுக்கு தங்க யானை விருது வழங்குகிறார் நடிகை ஜூகி சாவ்லா.
சென்னை, நவ. 21:     "பசங்க' திரைப்படத்துக்காக சர்வதேச அளவிலான சிறந்த இயக்குநருக்கான (தங்க யானை விருது) விருதை பெற்றார் இயக்குநர் பாண்டிராஜ்.

  ஹைதராபாத்தில் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் 20 நாடுகளைச் சேர்ந்த 70 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

  இந்த பட விழாவில் தமிழில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற "பசங்க' திரைப்படம் "கிட்ஸ்' என்ற பெயரில் திரையிடப்பட்டது.

  இயக்குநர் சசிகுமாரின் தயாரிப்பில், இயக்குநர் சேரனின் உதவியாளர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் குழந்தைகளின் உலகத்தை தனி பாணியில் படம் பிடித்துக் காட்டியிருந்தது.

  திரைப்பட விழாவின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (அக்-20) விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறந்த குழந்தைகள் பட இயக்குநராக பாண்டிராஜ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கான விருதை (தங்க யானை விருது) பிரபல இந்தி நடிகை ஜூகி சாவ்லா வழங்கினார்.

  "ஹெல்ப் மைன் ஹெல்ப்' (ஈரான்), "டூ மென்'ஸ் கிளாஸ் ரூம்' (சீனா) சிறந்த திரைப்படங்களாகவும், "சைல்டு அண்ட் தி ஏஞ்சல்' (ஈரான்) சிறந்த திரைக்கதையுள்ள படமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

  ""முதல் படத்திலேயே சர்வதேச விருது வாங்கிய அனுபவம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு காரணமாக இருந்த சசிகுமாருக்குதான் முதல் நன்றி. இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்த அவருக்கும் இந்த விருதில் பங்குண்டு. சர்வதேச சினிமா ஜாம்பவான்கள் இருந்த அந்த சினிமா மேடையில் சிறந்த இயக்குநருக்கான விருது பெற்றதை எனக்கு கிடைத்த பெரிய கௌரவமாக நினைக்கிறேன்.'' என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.
கருத்துக்கள்

Nalla kadhai thorpadhillai

By Tamil
11/23/2009 5:31:00 PM

nalla film pasanga atharku intha viruthallam sadharanam

By kumar
11/22/2009 7:10:00 PM

chinna pasangala vaithu padam eduthu periyavangalaiyum asathitina mr.pandiraj . weldon keep it up

By selvam
11/22/2009 5:50:00 PM

congrats pandiraj...best wishes for u r future.

By kalaimurugan
11/22/2009 10:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்