Wednesday, September 08, 2010 12:12 PM IST
Click
சினிமா
இலங்கை செல்வதால் மிரட்டல்: நடிகர் கருணாஸ்

First Published : 25 Jul 2010 12:31:25 AM IST


சென்னை, ஜூலை 24: இலங்கை செல்வதால் எஸ்.எம்.எஸ். மூலம் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக போலீஸôரிடம் நடிகர் கருணாஸ் புகார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளிவந்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நகைச்சுவை நடிகர் கருணாஸ். இலங்கையில் உள்ள கோயிலில் தனது குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக நடிகர் கருணாஸ் திட்டமிட்டார்.

இந்த நிலையில், ரூ.10 லட்சம் பணத்துக்காக இலங்கை வானொலி நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லும் அம்பாசமுத்திரம் அம்பானியே என்று தொடங்கும் வாசகங்களுடன் அவரது செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு ஏராளமான எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டன.நாம் தமிழர் இயக்கம் சார்பில் இந்த எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் சனிக்கிழமை புகார் செய்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  அகதிகள் முகாமில் உள்ள 25 மாணவர்கள் படிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறேன். எனக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 40 சதவீதம் தொகையை இலங்கைத் தமிழர் நலனுக்காக வழங்க முடிவு செய்துள்ளேன்.

எனது நற்பெயரைக் கெடுக்கும் வகையில், இந்த மிரட்டல் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும், இலங்கை பயணத்தை நான் மேற்கொள்வேன் என்றார்

"மிரட்டல் விடுக்கவில்லை'

நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடிகர் கருணாஸ் இலங்கைக்குச் செல்வதில் எங்கள் கட்சிக்கு எந்தத் தனிப்பட்ட அக்கறையும் கிடையாது. அது அவருடைய சொந்த விருப்பு, வெறுப்பைப் பொருத்தது.சில விரும்பத்தகாதவர்கள் எங்கள் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி கருணாஸýக்கு எஸ்.எம்.எஸ் மூலம் மிரட்டல் விடுத்திருக்கலாம் என நம்புகிறோம். எங்கள் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி தனி மனித உரிமையில் குறுக்கிடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கருணாஸின் குற்றச்சாட்டுக்கும் எங்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்