சிறார் நல கருத்தரங்கு
First Published : 17 Feb 2010 12:32:37 AM IST
Last Updated :
புதுச்சேரி, பிப். 16: சிறார்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தீங்கிற்கு எதிரான கருத்தரங்கு புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.÷புதுச்சேரி ஹோப் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவியும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய ஒருங்கிணைப்பாளருமான கமலினி பங்கேற்று பேசியது:÷குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்கள் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆணையத்தின் மூலம் இத்தகைய பயிற்சி வகுப்புகள் விரைவில் புதுச்சேரி முழுவதும் நடத்தப்படும் என்றார்.÷பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை கமலினி வழங்கினார். துளிர் நிறுவனத்தைச் சேர்ந்த நான்சி, ஹோப் நிறுவன இயக்குநர் ஜோசப் விக்டர் ராஜ், நிர்வாகி மேரி விக்டோரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.