மிஸ்கின் இயக்கத்தில் கமல்!
First Published : 02 Sep 2009 09:19:00 PM IST
Last Updated :
மிஸ்கின் இயக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன்தான் நாயகன். இதற்கான சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளது. மிஸ்கின் இயக்கத்தில் "நந்தலாலா' முடிவடைந்து விட்டது. கமலின் "உன்னைப் போல் ஒருவன்' படத்தில் பின்னணி இசை மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் படத்தின் பாடல்களும் விரைவில் வெளியிடப்படுகின்றன. இந்தப் படத்துக்குப் பிறகு மிஸ்கின் கமல் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "உன்னைப் போல் ஒருவன்' படத்துக்கு இசையமைக்கும் கமலின் மகள் ஸ்ருதி இந்தப் படத்துக்கு இசையமைக்கவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். புத்தரின் காலக் கட்டத்தில் நடக்கும் கதை என்பதால் புத்தரைப் பற்றிய புத்தகங்களை அதிகமாக படித்து வருகிறாராம் மிஸ்கின்.