ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு புதிய நிபந்தனை
First Published : 30 Jul 2010 01:54:52 PM IST
Last Updated :
உளுந்தூர்பேட்டை, ஜூலை 29: விபத்துகளை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கு புதிய நிபந்தனைகளை விதித்து ஆய்வு செய்வதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.÷அதன்படி விழுப்புரம் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் உளுந்தூர்பேட்டை பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.÷விபத்தை குறைப்பதற்கு ஒவ்வொரு பயிற்சி பள்ளியிலும் வகுப்பறை, செயல் விளக்க அறை, தீ அணைப்பான் கருவி, போக்குவரத்து சிக்னல் அறை, ஓய்வு அறை, அலுவலக அறை ஆகிய வசதிகளுடன் 1000 சதுரடி அளவில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி அலுவலகம் அமைந்திருக்கின்றனவா என ஆய்வு செய்தார்.÷மேற்கண்ட வசதிகளுடன் அமைந்த உளுந்தூர்பேட்டை பாலாஜி ஓட்டுநர் பயிற்சி பள்ளியை பார்வையிட்டு பயிற்சி பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.÷உளுந்தூர்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் துரை, பயிற்சி பள்ளி நிர்வாகி ராஜராஜன், புகை பரிசோதனை நிலைய ஆய்வர் வ.சு.சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.