அரசு நலத்திட்ட முகாம்
First Published : 30 Jul 2010 01:56:19 PM IST
Last Updated :
உத்தரமேரூர், ஜூலை 29: உத்தரமேரூர் தாலுகா காவனூர் புதுச்சேரியில் ஹேண்ட் இன் ஹேண்ட், தமிழ்நாடு சீடு அறக்கட்டளை, சன் ஸ்டார் நல்லாட்சிக்கான உரிமை பாதுகாப்பு குழுவினர்களால் அரசு நலத்திட்ட மனுக்கள் பெறும் முகாம் செவ்வாய்க்கிழமை நடந்தது. ÷கமிட்டித் தலைவர் எஸ்.கலைச்செல்வி தலைமை தாங்கினார். பயிற்சியாளர் ஏ.பாக்கியஷீலா முன்னிலை வகித்தார். ரதீஷ் வரவேற்றார். ÷முதியோர், விதவை, குடும்ப அட்டை, இலவச வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறையினரிடம் அளிக்கப்பட்டது. தொழில் முனைவோர் என்.சுமதி நன்றி கூறினார்.