லஷ்கர் இ தொய்பா அமைப்பு குறித்து பாகிஸ்தானியர்கள் கவலைப்படவில்லை: யுஎஸ் நிறுவன ஆய்வு தகவல்
First Published : 31 Jul 2010 12:00:00 AM IST
Last Updated :
வாஷிங்டன், ஜூலை 30: பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு குறித்து அந்நாட்டில் பெரும்பாலான மக்கள் கவலைப்படவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த பிஇடபிள்யூ எனும் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் இத்தகவல் வெளியாகியுள்ளது.÷பயங்கரவாதம் குறித்து பாகிஸ்தான் மக்கள் பெருமளவில் கவலை தெரிவித்த போதிலும் அவர்கள் அதிகம் பயப்படுவது தலிபான் மற்றும் அல் காய்தா அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்துத்தான். ஆனால் பெரும்பாலான மக்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.÷மொத்தம் 35 சதவீதம் பேர் மட்டுமே லஷ்கர்-இ-தொய்பா பற்றி அறிந்துள்ளனர். இவர்களில் வெகு சிலருக்கே அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது தெரிந்துள்ளது. ÷நான்கு பேரில் ஒருவர் மட்டுமே லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு குறித்து கருத்து தெரிவித்தனர். 40 சதவீதம் பேர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் இப்பிராந்தியத்திலிருந்து தங்களது செயல்பாடுகளை விஸ்தரித்துக் கொண்டே செல்வர் என அமெரிக்க ராணுவம் எச்சரித்திருந்தும் இத்தகவல் பலரைச் சென்றடையவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பயங்கரவாதிகள் கையில் நாடு சென்றுவிடும் என்ற அச்சம் வெகு சிலருக்கே உள்ளது.÷ஆனால் கடந்த ஆண்டு ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் கடுமையான நடவடிகைகளை எடுத்தபோது, நாடு பயங்கரவாதிகள் கையில் சென்றுவிடும் என்று தாங்கள் அஞ்சுவதாக 69 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இத்தகைய அச்சம் 51 சதவீத மக்களிடமே காணப்பட்டது. ÷தங்கள் நாட்டின் நிலைமை குறித்து பெரும்பாலான மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அரசியலில் ஊழல் மற்றும் லஞ்சம் அதிகரித்து வருவது குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர். அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி பெருமளவில் மாற்றம் கொண்டு வருவார் என 2 ஆண்டுகளுக்கு முன்பு 64 சதவீத மக்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இது தற்போது ஐந்து பேரில் ஒருவராகக் குறைந்துவிட்டது.÷அல்-காய்தா மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்புகள் பெரும்பாலான மக்களிடையே அந்த அளவுக்கு பிரபலமாக இல்லை.÷ இருப்பினும் காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தான் மக்களிடையே பெரும் பிரச்னையாகத்தான் உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்று 10 பேரில் 8 பேர் விரும்புகின்றனர். இது மிகப் பெரும் பிரச்னை என்று 71 சதவீதம் பேர் தெரிவித்ததாக ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. சீனாவுடனான பாகிஸ்தானின் நெருக்கத்தை பலரும் வரவேற்றுள்ளனர். பாகிஸ்தானின் சிறந்த நண்பன் சீனாதான் என்று குறிப்பிட்டுள்ளனர். ÷பாகிஸ்தான் அரசியலில் இஸ்லாம் மதம் மிகப் பெரிய பங்களிப்பை ஏற்படுத்துவதாக கடந்த 5 ஆண்டுகளில் குறைந்து வந்துள்ளது. 47 சதவீதம் பேர் மதத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 2005-ல் இதே கேள்விக்கு 63 பேர் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.