Tuesday, February 09, 2010 6:55 AM IST
Click
தமிழகம்
மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்: ஜெயலலிதா

First Published : 11 Nov 2009 12:04:51 AM IST


சென்னை, நவ. 10: தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
  இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
  கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் குறித்து தி.மு.க. அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரியவில்லை.
  கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தேனி மாவட்டம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் சரியாக தூர்வாரப்படாததால், கூழையாறு, வளவனாறு போன்ற கிளை ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, 2.5 லட்சம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
  இதேபோன்று கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதோடு, பயிர்கள் அழுகும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதிகளைச் சேர்ந்த பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
  பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் உயிர் நாடியான காண்டூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருமூர்த்தி அணைக்கு வரும் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
  மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். பல இடங்களில் சாலைகள் பழுதடைந்து, போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.
  சென்னையில், மழைக் காலங்களில் பங்கிங்காம் கால்வாய் நிரம்பி வழிவதால், கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம், சோளிங்கநல்லூர், காரப்பாக்கம், பள்ளிக்கரனை, வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், பெருங்குடி போன்ற பகுதிகள் நீரில் மூழ்கி விடுகின்றன.
  இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில், மழைக் காலங்களில் பங்கிங்காம் கால்வாயிலிருந்து இந்தப் பகுதிகளுக்கு நீர் செல்லாமல் தடுக்க வேண்டும். எனவே, ஒக்கியம் மடுவு வழியாக தண்ணீர் நேரடியாக கடலுக்குச் செல்லும் வகையில், மூன்று கால்வாய்களை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு 2005 இறுதியில் பொதுப்பணித் துறைக்கு நான் உத்தரவிட்டேன்.
  பின்னர் வந்த தி.மு.க. அரசு அதை செயல்படுத்தியிருந்தால், இந்தப் பகுதிகள் இப்போது நீரில் மூழ்கியிருக்காது.
  2005-ல் பெருவெள்ளம் ஏற்பட்டபோது அனைத்து இடங்களுக்கும் நான் நேரில் சென்று, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளையும் உடனுக்குடன் செய்ய உத்தரவிட்டேன். இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படும்போது, உடனுக்குடன் துயர்களை களைவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கியது. ஆனால், இன்று தமிழக மக்கள் நாதியற்று நிற்கிறார்கள்.
  2005-ம் ஆண்டு எனது ஆட்சிக் காலத்தில் அனைவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வெள்ள நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது. நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு ரூ.3000, தென்னைக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,800 வழங்கப்பட்டது.
  இப்போது விலைவாசி மூன்று மடங்கிற்கு உயர்ந்துள்ள நிலையில், பயிருக்கான இழப்பீடு மற்றும் வெள்ள நிவாரணத் தொகையை மூன்று மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும். வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
  துண்டிக்கப்பட்ட மற்றும் பழுதுபட்ட சாலைகளை செப்பனிடவும், தண்ணீர் வடிந்த பகுதிகளில் மின்சாரம் வழங்கவும் முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்கள்

ஜெயலலிதாவின் நிலை இபபோது திரிசங்கு சொர்க்கம் தான். தன்னை பயன்படுத்தி, தமிழர்கள் கல்வியிலும் தொழிலிலும் முன்னேறுவதை தடுக்க முயலும் சுப்ரமணிய சாமி, சோ, ஹிந்து ராம்,ஆகியோரது பேச்சை கேட்டு பி ஜெ பி கட்சியுடன் அதிமுக வை இணைப்பதா அல்லது எப்படியாவது ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியோடு கூட்டு சேர்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறார். வைகோ , ராமதாஸ், கம்யூனிஸ்ட் ஆகியோரது கூட்டு இனிமேல் ஒத்து வராது என்று தெரிந்து விட்டது. சு.சுவாமி , சோ , ராம் ஆகியோருடன் உறவு வைத்தால் தமிழ்நாட்டு மக்கள் எந்த மாதிரி அடி கொடுப்பார்கள் என்ற பயமும் அவருக்கு இருக்கிறது. ஆகவே இனி அம்மா பாடு அம்போ தான். வெறும் அறிக்கைகள் விட்டுக்கொண்டு கொடநாட்டிலும், சென்னைலும் , பாடூரிலும் காலத்தை கழிக்க வேண்டியதுதான்

By நிரஞ்சன்
11/12/2009 4:38:00 AM

The natural disasters is unavoidable and the humanitarian aids also cannot be avoidable, save the humane.

By vasanthakumar.
11/11/2009 5:32:00 PM

Hello Ex Chief Pls don't recommend / compel the Govt to give IRS 500,000/= instead of IRS 100,000 to flood victims,this is public money Govt can help to the victims as much as possible,Govt what will do for the Natural Clamities disaster.

By Nallavan
11/11/2009 2:23:00 PM

Admk vin selvakku 2006 election matrum 2009 parliament election lum ottu motthamaga sarinthuvittathu,agave arikai matrum dinamum armattam enbathu waste,agave ennudoya vendugol ennevendral,pesamal ammayar avargal kodainadu estate sendru rest eduka vendugiren By sankar

By N.Sankar
11/11/2009 11:38:00 AM

do you give your money ??try,,kalainar have a big double family ,,but you have nothing ,why don't you throw the 5 lacks to each ,who suffered by rain ??may be for the sympathy,you can get a chance in next election ,,do you ...think about it ??

By SATHISH
11/11/2009 11:17:00 AM

**யார் தவறு? - பாகம் 18: துட்டகைமுனுவின் படையெடுப்பு! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/11/2009 9:17:00 AM

அடையாறு முதல் கொட்டிவாக்கம் தொடங்கி கந்தன்சாவடி வரையில் கூவம் ஆற்றங்கரையின் இருபக்கமும் ஆக்கரமிப்பு செய்து குடிசை போட்டு இருப்பதால் மழைநீர் தேங்கி இப்பகுதி சாக்கடை போல காட்சியளிக்கிறது. எனவே அரசு ஆக்ரமிப்புகளை அகற்றி அவர்களுக்கு மாற்று இடம் அளித்து அடையாறு முதல் கடலுக்கு சென்று சேரும் வரை கூவத்தை அழகுப்படுத்தி படகு விட்டு சென்னையை சிங்கராமாக்க மேயர் முயல வேண்டும். திரு.சுப்பிரமணியன் சிறந்த மேயர். திமுக அரசு மக்கள் அரசு. செய்து முடிக்க வாழ்த்துகள்.

By சிங்கார சென்னைவாசி
11/11/2009 8:45:00 AM

இந்த கொசு தொல்லை தாங்கமுடியலைப்பா. ஏதாவது ஒரு அறிக்கை தினமும் யாருப்பா இவருக்கு இதை எல்லாம் எழுதி தருவது?

By சம்பத்குமார்
11/11/2009 8:36:00 AM

Jeyalalitha, your power is over. All you will say is what you will not do. Because of the terrorism unleashed by you, Karunanidhi, and his whole family are back in power in spite of corruption allegations against them. It is better for you to ask for forgiveness for all the sins committed by you instead of saying what someone else should do. Get out of Tamilnadu. You are not a Tamil.

By ANNRI
11/11/2009 2:50:00 AM

இப்படியே அறிக்கை விட்டு காலத்தை ஓட்ட வேண்டியதுதான்.

By நிரஞ்சன்
11/11/2009 12:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்