Tuesday, February 09, 2010 6:55 AM IST
Click
தமிழகம்
சிப்காட் அமைக்க 1700 ஏக்கர் விளை நிலத்தை தரிசாக காட்ட முயற்சி: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

First Published : 11 Nov 2009 04:19:03 AM IST

Last Updated : 11 Nov 2009 05:13:27 AM IST

சென்னை, நவ. 10: சிப்காட் அமைப்பதற்காக 1700 ஏக்கர் விளை நிலத்தை தரிசு நிலமாக காட்ட முயற்சி நடப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
  இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உள்பட்ட மேல மீனாட்சிபுரம், கீழ மீனாட்சிபுரம், தெற்கு ஆவாரங்காடு, ராமச்சந்திராபுரம், சுப்பிரமணியாபுரம், லட்சுமிபுரம், மேட்டூர், முப்பிலிப்பட்டி ஆகிய 8 கிராமங்களை உள்ளடக்கிய 1700 ஏக்கர் விவசாய நிலத்தில் சிப்காட் அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  இதற்காக இந்த விவசாய நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கான ஆய்வு பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த 8 கிராமங்களிலும் 70 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட மக்கள். மீதம் உள்ளோர் பிற்படுத்தப்பட்டோர்.
  இவர்களுக்கு இந்த நிலம்தான் வாழ்வாதாரமாகும். 1700 ஏக்கர் விளை நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்தால் 8 கிராமங்களைச் சேர்ந்த 5000 பேர் வேறு வழி இல்லாமல் அனாதைகளாக நிற்க வேண்டியிருக்கும்.
  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பதவி ஏற்ற தி.மு.க. அரசு நிலம் இல்லா ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக உறுதி கூறியது. ஆனால் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கைப்பற்ற நினைப்பது தவறு.
  எனவே விளை நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முயற்சியை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு விளை நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முயற்சியை அரசு கைவிடாவிட்டால் தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.
  இந்த சந்திப்பின் போது 8 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள்கள் உள்பட 60 பேர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

the government should explore all possibilities of merit and demerits of the scheme/project before acquiring any land from indiduval, farmers and middle class people.No people should suffer in view of land acquisition. If it is invitable proper compensation should be awarded or alternative attrangements be made for their livihood or their survival. India being a agricultural country and the same has been supported by our forefathers and enacted laws for agricultural development. The vision of forefathers should not be spoiled by implementing unwanted schemes. Thanking you

By v.thatchanamoorthy
11/11/2009 5:33:00 PM

samathuvapuram kattavm, tharsali podavm,thozrchalihal amikaum thalithughal kudi vazm paguthiyea thodarthu akkramika paduvathi etharku munnbea thadukathathal yen makkal enru,rottorathilum,kuvakarihalilum vazm avalam neartherukathu. arasin intha sayyali arka marupom.kirushnasamiyum,thirumaum saravanan ponravarhaluku thavi pada mattargal avargali ponrorkha porada subramaniyasami erukirarea.

By rajeshgomugan
11/11/2009 1:22:00 PM

முதல்வரின் ராஜதந்திரத்தால் அரசியல் அநாதை ஆக்கப்பட்ட கிருஷ்ணசாமி என்னனவோ செய்து பார்க்கிறார். ஒன்னும் வேலைக்கு ஆக மாட்டேங்குது. இப்போ மம்தா பானர்ஜி ஸ்டைலில் இறங்கிட்டார். கலக்குங்க. இலங்கை விஷயத்தில் திருமாவளவனின் இரட்டை நிலையால் மக்களின் நம்பகத் தன்மையை இழந்து விட்டார். இதைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுக்களை நீங்கள் வளைக்கலாம். கிருஷ்ணசாமி is back!

By சரவணன், சென்னை
11/11/2009 12:32:00 PM

**யார் தவறு? - பாகம் 18: துட்டகைமுனுவின் படையெடுப்பு! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/11/2009 9:28:00 AM

IT IS THE BEST......DOUBLE ACTION OF D M K GOV IS PROVED....BE CAREFUL

By avudaiappan
11/11/2009 6:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்