பன்றிகாய்ச்சல் ஒரு தொற்று நோயாகும்
By
First Published : 10 April 2012 04:56 PM IST
ஆரம்ப காலத்தில் அதாவது 1920 களில் இந்த வைரஸ் பன்றிகளிடையே காணப்பட்டது. பின்னர் இந்த வைரஸ் மனிதர்களை தாக்க துவங்கி பின்பு ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தொற்று நோயாக உருமாறியது. தற்போது இந்த நோய் பன்றிகளின் மூலம் மனிதர்களுக்கு பரவுவது இல்லை. நோய் பாதிக்கப்பட்ட மனிதரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.
வயதானவர்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நீரிழிவு நோய், இரத்தக்கொதிப்பு, இருதயநோய், கல்லீரல் நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்நோய் தீவிரமாக உடல்நிலையை பாதிக்க வாய்ப்புள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் உலக அளவில் பரவத்தொடங்கிய இந்த நோய் அனைத்து நாடுகளின் தீவிர தடுப்பு நடவடிக்கை மூலமாக முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. உலக அளவில் பரவும் நோய் நிலையிலிருந்து சாதாரண புளு காய்ச்சலாக உருமாறிவிட்டதால், இனி இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள்
பன்றிக்காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தும்மல், இருமல், மூக்கில் நீர்வடிதல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
பன்றிக்காய்ச்சல் பரவும் விதம்
இன்புளுயன்சா எச்1என்1 வைரஸ் கிருமிகள் பாதிக்கப்பட்ட நபரின் சுவாச மண்டலத்தில் இருந்து தும்மல் அல்லது இருமலின் பொழுது உருவாகும் சளித்திவலைகள் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.
பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகப்படும் நபரின் சுவாச மண்டலத்தில் இருந்து தொண்டை தடவல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு RT - PCR எனும் பரிசோதனை மூலமாக இந்நோய் உறுதிப்படுத்தப்படுகிறது. கிண்டி அரசு கிங் நிலையம், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுhரி மருத்துவமனைகளில் இலவசமாக இப்பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் 12 தனியார் ஆய்வகங்களில் இந்த பரிசோதனை செய்ய உரிய கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்த பின்னர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மருந்து
பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறி இருப்பவர்கள் அருகிலுள்ள மருத்துவரை அணுகி ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ஒசால்டாமாவீர் (டாமிப்ளு) மருந்துகளை உட் கொள்வதால் முழுமையாக இந்நோயை குணப்படுத்த முடியும். இதன் மூலம் இறப்பினை தவிர்க்கலாம். பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான ஒசால்டாமாவீர் (டாமிப்ளு) மருந்துகள் போதுமான அளவு (4 இலட்சம்) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான சிரப் ஒசால்டாமாவீர் (டாமிபுளு) மருந்துகள் வாங்கப்பட்டுள்ளது.
பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க பொதுமக்களுக்கு கீழ்குறிப்பிட்ட விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தும்மல் மற்றும் இருமலின்போது மூக்கு மற்றும் வாயினை துணிகளால் மூடும் சுகாதாரமான பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தல்
அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுதல்
பாதிக்கப்பட்ட நபர்கள் நோயின் தாக்கம் குறையும் வரை தனிமைப்படுத்துதல் ஆகியவையாகும்.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- பர்கூர் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை
- தீயை அணைக்க முயன்ற முதியவர் தீ விபத்தில் சாவு
- சேரன்மகாதேவியில் முதியவரை கல்லால் தாக்கி கொன்றவர் கைது
- தொழிலாளி தலையை துண்டித்து கொன்றதாக ஒருவர் கைது
- வி.ரெட்டியார்பட்டியில் போலி டாக்டர் இருவர் கைது
- சோளிங்கர்: அனுமதியின்றி நடத்திய 5பார்களுக்கு சீல்.
கருத்தை பதிவு செய்க