உற்சாகமாக பணியாற்ற முட்டை சாப்பிடுங்கள்

First Published : 10 April 2012 03:06 PM IST

பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் எப்போதும் தூங்கி வழிகிறீர்களா... உடல் எப்போதும் சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா? சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஆம் என்பது பதில் என்றால், உங்கள் உணவில் முட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆம் முட்டையில் அதுவும் வெள்ளைக் கருவில் உள்ள புரதச் சத்து உங்களை மிகவும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும்.

உடனடியாக உடலுக்கு சக்தியை வழங்கும் சாக்கலேட், பிஸ்கெட், இனிப்புப் பண்டங்களில் உள்ள கார்போஹைட்ரேட்டை விட, முட்டையில் உள்ள புரதச் சத்து உடலுக்குத் தேவையான கலோரிகளை சமச்சீரான விகிதத்தில் பயன்படுத்த உதவிபுரிகிறது.

முட்டையில் உள்ள புரதச்சத்தை சக்தியாக மாற்றிக் கொண்டு, நமது உடல், சீரான அளவில் அதனை கலோரிகளாக எரிக்கின்றன. இதனால் தொடர்ந்து சீரான வேகத்தில் இயங்க நமது உடலுக்குத் தேவையான சக்தியை மூளை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

பொதுவாக நாம் உண்ணும் உணவைப் பொருத்துத்தான் நமது மூளை உடலின் செயல்திறனை அமைக்கிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை சக்தியாகப் பெறும் மூளை, அதனை அடிப்படையாக வைத்து உடல் இயக்கத்தை மாற்றி அமைக்கிறது.

ஆனால் உடலில் அதிகமான கொழுப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும், இதய பாதிப்பினை ஏற்படுத்தும் என்று முட்டையை தவிர்த்து விடுவார்கள். ஆனால், புகைப்பிடிப்பது, உடல் பருமன், உடற்பயிற்சி இன்மை ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சினைகளோடு ஒப்பிடும் போது முட்டை மிகக் குறைந்த அளவிற்கே பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், முட்டைக்கு ஓகே சொல்லலாம் தவறில்லை.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.