ஏலக்காயில் வாசனை மட்டுமல்ல..
By
First Published : 14 April 2012 02:37 PM IST
வாசனைப் பொருட்கள் என்றால் அதில் முதல் இடத்தை வகிப்பது ஏலக்காய்தான் ஆனால், ஏலக்காயில் வெறும் வாசனை மட்டுமல்ல பல்வேறு மருத்துவ குணங்களும் உண்டு என்பது ஒரு சிலர் அறியாத தகவலாகும்.
ஏலக்காயின் மருத்துவக் குணங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்...
ஏலக்காயில் புரதச் சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளன.
பாலில் ஏலக்காய் சேர்த்து சுட வைத்து அத்துடன் தேன் கலந்து அருந்தி வர மலட்டுத் தன்மை நீங்கும். இதனை இருபாலரும் அருந்தலாம். அதே சமயம் அதிகமாக ஏலக்காய் உட்கொண்டால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உணவை செரிக்க வைப்பதில் ஏலக்காய்க்கு அதிக பங்குண்டு. உணவை எளிதாக செரிமானம் செய்து பசியைத் தூண்டும்.
வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காயைப் பயன்படுத்தலாம்.
நெய், அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை சமைக்கும் போது அது எளிதில் ஜீரணமாக வேண்டும் என்றால் அதனுடன் ஏலக்காய் சேர்க்கலாம்.
குத்திரும்பல், தொடர் இருமல் இருப்பவர்கள் ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெறலாம்.
தொண்டை அழற்சிக்கு ஏலக்காயும், லவங்கப் பட்டையையும் சேர்த்து கொதிக்க வைத்த நீரால் வாயைக் கொப்பளித்து வந்தால் நிவாரணம் பெறலாம்.
ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி போன்ற நோய்களுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் ஏலக்காய் முக்கியமான இடத்தில் உள்ளது.
மன அழுத்தம், தடுமாற்றம், மனச் சோர்வு போன்றவற்றிற்கு ஏலக்காய் டீ சிறந்த நிவாரணத்தை அளிக்கும். டீத் தூளுடன் ஏலக்காயை சம அளவு சேர்த்து தயாரிக்கப்படும் டீ மன அழுத்ததைக் குறைக்கும்.
வெயிலினால் ஏற்படும் நா வறட்சி, தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு போன்றவற்றிற்கு ஏலக்காயை வெறும் வாயில் போட்டு மென்றாலே போதுமானது.
சளிப் பிரச்சினைக்கும், செரிமானக் கோளாறுகளுக்கும் கூட ஏலக்காய் மருந்தாக அமைகிறது.
வெயிலில் அதிகமாக அலைபவர்களுக்கு ஏற்படும் தலை சுற்றலை தடுக்க, ஏலக்காய் கஷாயம் குடிக்கலாம்.
நிக்காத விக்கலையும் நிக்க வைக்கும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. ஏலக்காய் மற்றும் புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி லேசான சூட்டில் குடித்தால் விக்கல் உடனே நிற்கும்.
வாயுத் தொல்லை இருப்பவர்களும் ஏலக்காய் கஷாயம் குடித்தால் கோளாறு சரியாகும்.
புகைப் பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள், புகைப்பிடிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றும் போது ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், விரைவில் புகைப்பிடிப்பதை மறக்கலாம்.
ஆனால் இவ்வளவு மருத்துவக் குணங்கள் கொண்ட ஏலக்காயை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- விழுப்புரம் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம சூட்கேஸ்
- சென்னை துறைமுக வளாகத்தில் பயங்கர தீ விபத்து
- மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: சிறுவன் சாவு
- 6வது ஐபில் கிரிக்கெட்: தில்லிக்கு வெற்றி இலக்கு 173
- கூட்டுறவு வங்களில் அரசியல் தலையீடுகள் கூடாது: உச்ச நீதிமன்றம்
- அண்ணாமலைப் பல்கலையில் நுழைவுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தல்
கருத்தை பதிவு செய்க