அடுத்த 5 ஆண்டுகளில் 76,000 மெகாவாட் மின் உற்பத்தி: அமைச்சர் தகவல்

First Published : 01 May 2012 12:14 AM IST

புது தில்லி, ஏப். 30: இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 76 ஆயிரம் மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய மின் துறை இணையமைச்சர் கே.சி.வேணுகோபால் திங்கள்கிழமை தெரிவித்தார்.

 இந்தத் தகவலை அவர் மாநிலங்களவையில் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கையில் கூறினார். அவர் எழுத்துபூர்வமாக அளித்த விவரம்:

 12-வது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் (2012-2017) 76,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த உற்பத்தி அளவு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

 இதற்காக ரூ. 13 லட்சத்து 72 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் மின் உற்பத்திக்காக மட்டும் ரூ. 6 லட்சத்து 38 ஆயிரத்து 600 தேவைப்படும். மின் விநியோகத்துக்கு ரூ. 3 லட்சத்து 6 ஆயிரத்து 235 தேவைப்படும் எனக் கணக்கிடப்

 பட்டுள்ளது.

 இந்தத் தொகை வங்கிகள், பொதுத் துறை நிதி நிறுவனங்கள், கட்டுமானத் துறை மற்றும் மின்துறை முதலீட்டு நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் திரட்டப்படும். கடன் பத்திரம், பங்குப் பத்திரம் மூலமும் நிதி திரட்டப்படும் என்று அவர் கூறினார்.

 24 மின் திட்டங்கள்... 24 நீர் மின் திட்டங்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன என்று அவர் கூறினார்.

 மின் திட்டங்களுக்கு மத்திய மின் ஆணையம் முதலில் ஒப்புதல் அளிக்கிறது.

 பின்னர் இத்திட்டங்கள் மத்திய வனத் துறை அமைச்சம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

 அவ்வாறு ஒப்புதல் பெறுவதற்காகக் காத்திருக்கும் மின் திட்டங்கள் குறித்து மத்திய மின் துறை தொடர்ந்து கண்காணித்து அவை விரைவாக ஒப்புதல் பெற ஏற்பாடு செய்து வருகிறது.

 தற்போது, 24 நீர் மின் திட்டங்கள் அமைச்சகங்களின் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றன. இவை 25 மெகாவாட்டுக்கு கூடுதல் திறன் கொண்டவை. இவற்றை விரைவில் நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

 இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இப்போது 51 மின் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

 25 மெகாவாட்டுக்கும் கூடுதல் திறன் கொண்ட இந்த மின் திட்டங்கள் மூலம் 13 ஆயிரத்து 332 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றார்.

 கர்நாடகத்தின் திட்டம்... கர்நாடக மாநிலம் சமீபத்தில் 345 மெகாவாட் திட்டம் பற்றிய முழுமையான வரைவு ஒன்றை மத்திய மின் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.

 காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அமையவுள்ள சிவசமுத்திரம் மின் திட்டம் ரூ. 1,5222.82 கோடி மதிப்புள்ளது. இந்த திட்டம் மத்திய நீர் ஆணையம் மற்றும் இந்திய நிலயியல் ஆய்வு நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது என்று அவர் கூறினார்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.