இலங்கை தமிழர் விவகாரம்: ஐ.நா. அமைப்பில் ஜி.கே. மணி வாதம்
By Vanisri Sivakumar, சென்னை
First Published : 01 November 2012 05:55 PM IST
இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து மதிப்பீட்டாய்வு ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பசுமைத்தாயகம் சார்பில் ஜி.கே. மணி, இர. அருள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இது குறித்து பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 31ம் தேதியன்று ஜெனிவாவில் நடைபெற்ற முன்னோட்ட விசாரணையில் ஜி.கே. மணி உட்பட உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மனித உரிமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஜி.கே. மணி முன் வைத்த வாதங்களில், இலங்கையில் நடப்பதை உள்நாட்டுப் பிரச்னையாக பார்க்காமல், இன அழிப்பாகத்தான் பார்க்க வேண்டும். இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரையும் அவர்களின் சொந்த ஊர்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழீழம் குறித்து ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து இன்று நடைபெற்ற காலமுறை மதிப்பீட்டாய்விலும், ஜி.கே. மணியும், அருளும் பங்கேற்று வாதங்களை முன்வைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் மேலும்
கருத்தை பதிவு செய்க
பரிந்துரைகள்
- ரெய்னா அதிரடி; இறுதிச்சுற்றில் சூப்பர் கிங்ஸ்
- சென்னையில் தொழில் அதிபர் தற்கொலை : குடும்பத்தாரும் மரணம்
- தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ.248 குறைந்தது
- ராமதாஸ் நலம் பெற கருணாநிதி - அகிலேஷ் யாதவ் வாழ்த்து
- மிகப் பயங்கரமான குற்றம் : பிரிட்டன் பிரதமர்
- பணியாற்றும் தகுதி இருந்தால் மனைவியிடம் இருந்து கணவன் ஜீவனாம்சம் கோர முடியாது: உயர் நீதிமன்றம்
கருத்துகள்(2)
திரு.மணி அவர்களுக்கும் அவரது கட்சியினருக்கும் தமிழர்களின் நன்றி.
பதிவுசெய்தவர் ப.பத்மநாபன் 11/02/2012 01:25 இதற்கான பதில் முறையற்ற கருத்து
இலங்கை தமிழர்களுக்கு ஒற்றுமை இல்லை. அதனால் அவர்களால் தன்மானத்தோடு வாழ முடியாது. ஒரு அமைப்பு ஒன்று இருந்தால் அதில் உள்ள ஒருவரை விலை கொடுத்து எளிதாக வாங்கி விட முடியும். அவர்களிடம் உறுதி இல்லை. பணம் பிரதானமாகத் தெரிவதால் அவர்களால் முன்னேற முடியாது.
பதிவுசெய்தவர் சூர்யா 11/02/2012 02:31 இதற்கான பதில் முறையற்ற கருத்து