இலங்கை செல்லும் குழுவில் திமுக சார்பில் யாரும் இடம்பெறவில்லை: கருணாநிதி

First Published : 15 April 2012 02:00 PM IST

சென்னை, ஏப்.15: இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான மறுவாழ்வு கிடைப்பதை நேரில் பார்வையிட்டு உறுதி செய்ய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்லும் இந்தியக் குழுவில் திமுக சார்பி்ல் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: நாடாளுமன்றக் குழு இலங்கை செல்லும் போது திட்டமிட்டபடி திமுக உறுப்பினரும் செல்கிறாரா?

கருணாநிதி: திட்டமிட்டபடி என்று கேள்விகேட்பதே தவறு. அப்படி திமுக திட்டமிடவில்லை.

கேள்வி: பயணம் மேற்கொண்டால் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு முன்னேறும், எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

கருணாநிதி: எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதற்கு பழைய கால உதாரணங்கள் இருக்கின்றன. எனவே அந்தப் பயணத்தை திமுக சார்பில் யாரும் மேற்கொள்ளவில்லை.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.