கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை : ராமதாஸ் வலியுறுத்தல்

First Published : 15 April 2012 12:52 PM IST

சென்னை, ஏப்.15: கல்விபெறும் உரிமைச் சட்டத்தை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு கொண்டுவந்த கல்வி உரிமைச்சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனியார் பள்ளிகளில் 25% இடங்களை அந்தந்த பகுதிகளில் வாழும் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வரும் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே முடிவடைந்துவிட்டது. இதை காரணம் காட்டி ஏழை மாணவர்களுக்கு இடம் ஒதுக்குவதை தவிர்க்க தனியார் பள்ளிகள் முயற்சிசெய்யும். எனவே தனியார் பள்ளிகளில் இதுவரை செய்யப்பட்டுள்ள மாணவர் சேர்க்கைகளை ரத்து செய்து கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி மாணவர் சேர்க்கை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.

இதைச் செய்ய மறுக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்வதுடன் அவற்றை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.