ராஜிவ் கொலையாளிகளின் வழக்கு தமிழகத்திலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்
By
First Published : 01 May 2012 11:29 AM IST
புதுதில்லி, மே.1: தூக்குத் தண்டனையை எதிர்த்து ராஜிவ் கொலைக்குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
முன்னதாக இவர்களின் கருணை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதையடுத்து 3 பேரையும் செப்டம்பர் மாதம் தூக்கிலிட முடிவுசெய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் 3 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்றம் 3 பேரின் தூக்குத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
தங்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் நீண்டகாலம் எடுத்துக் கொண்டார் என்பதால் தங்களின் தூக்குத் தண்டனையை குறைக்கும்படி 3 பேரும் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே சென்னை இந்த வழக்கு விசாரணை நடைபெற உகந்த இடமல்ல என்று காங்கிரஸைச் சேர்ந்த வெங்கட் என்பவர் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரினார்.
இந்த நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி விசாரணை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர்.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- அஹோபில மடத்தின் 45-வது பட்ட ஜீயர் காலமானார்
- ஐபிஎல் 6: பெங்களூர் வெற்றி
- குஜராத்தில் சூதாட்ட தரகர்களைத் தேடி போலீஸார் சோதனை
- ஐபிஎல் 6: சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சு
- 10 மணி கடந்தும் பேசினார்; போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
- தூக்கம் தொலைத்து குளியல் மறந்து... தில்லி போலீஸ் பிடியில் ஸ்ரீசாந்த்
- கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன், ஸ்ருதிஹாசன் நெருக்கம்?
- பிரதமர் மன்மோகன் பற்றிய அடுத்த சர்ச்சை கிளம்பிவிட்டது
- கைக்குட்டை மூலம் சைகை! ஐபிஎல் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் விநோதம்!
- 32 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணையும் ஜோடி
- ஐபிஎல்.லில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் கைது
- மரியான் படத்துக்காக சிறுத்தையுடன் நடித்த தனுஷ்!
கருத்தை பதிவு செய்க