16, 17 தேதிகளில் திருமலையில் படித் திருவிழா
By
First Published : 14 April 2012 01:10 PM IST
வேலூர், ஏப்.13: திருப்பதி திருமலையில் 43-ம் ஆண்டு படித் திருவிழா வரும் 16, 17 தேதிகளில் நடைபெறுகிறது என்று திருப்பதி திருமலை படிவிழா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் நிறுவனர் மற்றும் பொதுச்செயலர் ஆ.செ. நரசிம்ம ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 16 மற்றும் 17 தேதிகளில் நடைபெறும் படித் திருழாவில் 200 பஜனை குழுவினருடன் 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கவுள்ளனர். 16-ம் தேதி மாலை 4 மணிக்கு திருப்பதி மலையடிவாரம் பாலாஜி பேருந்து நிலையம் அருகேயுள்ள பூதேவி தேவஸ்தான மண்டபத்தில் பஜனை மற்றும் பக்திப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மறுநாள் காலை 6 மணிக்கு அலிபிரியில் சென்னை ஓம் முருகாஸ்ரமம் சங்கரானந்த சுவாமிகள், காட்பாடி ஸ்ரீவித்யாபீடம், ஸ்ரீபாரதி முரளீதர சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் படித் திருவிழாக் குழுவினர் புறப்பாடு நடைபெறுகிறது. பெண்கள் ஒவ்வொரு படியிலும் மஞ்சள், குங்குமம் வைக்க பக்தர்கள் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பஜனைப் பாடல்கள்களைப் பாடியபடியே திருமலைக்கு ஏறிச் செல்வர். அதன் பிறகு திருமலை கோவிலின் நான்மாட வீதிகளை வலம் வந்து திருவேங்கிடமுடையானை தரிசனம் செய்வர்.
இத்திருவிழாவில், சித்தேரிப்பட்டு, பெரிய செறுவத்தூர், இரும்புலி, சின்னசாத்தாம்பாடி, கள்ளப்புலியூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பஜனைக் குழுவினர் பாதயாத்திரையாக அலிபிரியை அடைவர்.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை வேண்டும் : லி கெகியாங்
- திருவையாறு அருகே இரண்டு பஸ்கள் மோதல்: 22 பேர் காயம்
- தஞ்சை அருகே ரேஷன் அரிசி பறிமுதல்
- பண்ருட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை மரணம் : உறவினர்கள் முற்றுகை
- பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இன்று அறுவை சிகிச்சை
- சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி தற்கொலை
கருத்தை பதிவு செய்க