ஓய்வறையை சேதப்படுத்தவில்லை: பஞ்சாப் அணி மறுப்பு

First Published : 15 April 2012 01:32 AM IST

புது தில்லி, ஏப்.14: புணே வாரியர்ஸýக்கு எதிரான ஆட்டத்தின்போது வீரர்கள் ஓய்வறையை பஞ்சாப் அணி வீரர்கள் சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அந்த அணி மறுத்துள்ளது.

 வீரர்களின் ஓய்வறை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பஞ்சாப் வீரர்கள் யாருக்கும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்த இருப்பதாக அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பஞ்சாப் அணியின் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. எங்கள் வீரர்கள் உண்மையான உத்வேகத்தோடு விளையாடக்கூடிய அளவுக்கு முதிர்ச்சியடைந்தவர்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 புணே வாரியர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் ஆட்டம் கடந்த 8-ம் தேதி புணேவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெற்றது.

 அந்த ஆட்டத்தின்போது வீரர்களின் ஓய்வறையை பஞ்சாப் வீரர்கள் சேதப்படுத்தியதாக ஐபிஎல் நிர்வாகத்திடம், மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் புகார் செய்துள்ளது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம், மகாராஷ்டிர கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் புகார் செய்தனர். அதில், "பஞ்சாப் அணியின் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் ஆத்திரமடைந்த அவர் வீரர்கள் ஓய்வறையின் ஜன்னல் கதவை அடித்து உடைத்துள்ளார்' என்று கூறியிருந்தனர்.

 ஐபிஎல் விதிமுறைப்படி இதுபோன்ற பிரச்னைகளை மேட்ச் ரெப்ரியே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால், வீரர்கள் ஓய்வறை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தை மேட்ச் ரெப்ரிக்கு அனுப்பினார் ராஜீவ் சுக்லா. அதன்பேரில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதில், பஞ்சாப் வீரர் பால் வல்தாட்டிதான் வீரர்கள் ஓய்வறையை சேதப்படுத்தியுள்ளார். கில்கிறிஸ்ட் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் வல்தாட்டி திட்டமிட்டு இதைச் செய்யவில்லை. எதிர்பாராதவிதமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அவர் எவ்வித தண்டனையுமின்றி தப்பினார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.