திமுக கூட்டணிக்கு நடிகர் கார்த்திக் கட்சி ஆதரவு
By
First Published : 01 April 2011 12:08 AM IST
சென்னை, மார்ச் 31: திமுக கூட்டணிக்கு 213 தொகுதிகளில் ஆதரவு அளிப்பதாக அகில இந்திய நாடாளுமன்ற மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் தெரிவித்தார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
சட்டப் பேரவைத் தேர்தலில் எங்களது கட்சி 19 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 9 இடங்களில் டார்ச் விளக்கு சின்னத்திலும், முரசு, மேசை விளக்கு, கூடை, தொப்பி உள்ளிட்ட சுயேச்சை சின்னங்களிலும் எங்களது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாங்குனேரி உள்ளிட்ட 2 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். இதர 213 தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த தலைமை, திறமையான நிர்வாகம், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது உள்ளிட்ட காரணங்களால் திமுகவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம்.
போடி, கம்பம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் எங்களது வேட்பாளர்கள் அதிமுகவினரால் கடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதில் கம்பம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மீண்டும் தப்பி வந்து எங்கள் கட்சி சார்பாக போட்டியிடுகின்றனர் என்றார் நடிகர் கார்த்திக்.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- ரெய்னா அதிரடி; இறுதிச்சுற்றில் சூப்பர் கிங்ஸ்
- சென்னையில் தொழில் அதிபர் தற்கொலை : குடும்பத்தாரும் மரணம்
- தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ.248 குறைந்தது
- ராமதாஸ் நலம் பெற கருணாநிதி - அகிலேஷ் யாதவ் வாழ்த்து
- பணியாற்றும் தகுதி இருந்தால் மனைவியிடம் இருந்து கணவன் ஜீவனாம்சம் கோர முடியாது: உயர் நீதிமன்றம்
- மிகப் பயங்கரமான குற்றம் : பிரிட்டன் பிரதமர்
கருத்தை பதிவு செய்க