அ.தி.மு.க. அணியில் கார்த்திக் கட்சி
By
First Published : 20 January 2011 03:12 AM IST
சென்னை, ஜன.19: நடிகர் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். முன்னதாக ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் கார்த்திக் சந்தித்துப் பேசினார்.
2009 மக்களவைத் தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க கார்த்திக் முயற்சி மேற்கொண்டார். அதற்காக ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. பின்னர் பா.ஜ.க.வுடன் கார்த்திக் கட்சி இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தது.
2009 தேர்தலுக்குப் பிறகு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்த கார்த்திக், இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளார்.
கார்த்திக், அ.தி.மு.க.வை ஆதரித்து தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிகிறது.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- பர்கூர் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை
- தீயை அணைக்க முயன்ற முதியவர் தீ விபத்தில் சாவு
- சேரன்மகாதேவியில் முதியவரை கல்லால் தாக்கி கொன்றவர் கைது
- தொழிலாளி தலையை துண்டித்து கொன்றதாக ஒருவர் கைது
- வி.ரெட்டியார்பட்டியில் போலி டாக்டர் இருவர் கைது
- சோளிங்கர்: அனுமதியின்றி நடத்திய 5பார்களுக்கு சீல்.
கருத்தை பதிவு செய்க