திரைத் துறையினர் ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்கக் கூடாது: ராமதாஸ்
By
First Published : 23 January 2011 12:00 AM IST
அரியலூர், ஜன. 22: திரைத் துறையினர் ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிளைப் பொறுப்பாளர்களுக்கு தேர்தல் பணிக் குழுவினருக்கான பயிற்சி முகாம் ஆண்டிமடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் ராமதாஸ் பேசியது: தமிழகத்தில் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 67-க்குப் பிறகு திரைத் துறையிலிருந்து வந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர்.
இப்போது திரைத் துறையில் உள்ள விஜயகாந்த் போன்றோர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இதுபோன்ற செயலுக்கு இளைஞர்கள் வாய்ப்பளித்துவிடக் கூடாது.
இந்த நிலையை மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கல்வி, விளையாட்டு, விவசாயம், நூலகம், மருத்துவத்துக்கு எனக் குழுக்களை அமைக்க வேண்டும். வளர்ந்து வரும் இளைஞர்களுக்கும், கிராம மக்களுக்கும் இந்தக் குழுவினர் வழிகாட்ட வேண்டும்.
இதுபோன்ற செயல்களை மேற்கொண்டால் இளைஞர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருப்பர்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின்னர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மதுக் கடைகளை நிரந்தமாக மூடக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும் என்றார் ராமதாஸ்.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன், ஸ்ருதிஹாசன் நெருக்கம்?
- பிரதமர் மன்மோகன் பற்றிய அடுத்த சர்ச்சை கிளம்பிவிட்டது
- கைக்குட்டை மூலம் சைகை! ஐபிஎல் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் விநோதம்!
- 32 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணையும் ஜோடி
- ஐபிஎல்.லில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் கைது
- மரியான் படத்துக்காக சிறுத்தையுடன் நடித்த தனுஷ்!
கருத்தை பதிவு செய்க