இலங்கை வடக்குப் பகுதியில் தேர்தல்: ராஜபட்ச பேச்சில் உள்நோக்கம்
By
First Published : 12 July 2012 02:05 AM IST
சென்னை, ஜூலை 11: இலங்கை வடக்குப் பகுதியில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக அந்த நாட்டு அதிபர் ராஜபட்ச கூறியுள்ள கருத்தில் உள்நோக்கம் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை வடக்குப் பகுதியில் 2013 செப்டம்பரில் தேர்தல் நடத்தப் போவதாக இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியிருக்கிறார். ஆனால் தேர்தல் நடைமுறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதில் ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் சிலர், கடந்த மாதம் பூசா முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதை எதிர்த்த மற்ற விடுதலைப் புலிகள், பூசா முகாமுக்கு மாற்றப்பட்டவர்களை மீண்டும் வவுனியா சிறையிலேயே அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதை மறுத்த சிறை அதிகாரிகள், 3 விடுதலைப் புலிகளை ஒரே அறையில் தள்ளிப் பூட்டிவிட்டனர். இதனால் வவுனியா சிறையில் கடந்த மாதம் 30-ம் தேதி கலவரம் ஏற்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து வவுனியா சிறையில் இருந்த 201 கைதிகளும் அனுராதபுரத்தில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் தமிழ்க் கைதிகள் பலர் காயமடைந்துள்ளதோடு, கணேசன் நிமலரூபன் என்பவர் இறந்துவிட்டார்.
ஆனால் அவர் மாரடைப்பால் இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிமலரூபன் உடலை அவர் பெற்றோர் வவுனியாவில் தகனம் செய்யவேண்டும் என்று கோரியுள்ளனர். இதற்கு மறுத்து கொழும்புக்கு அருகே உள்ள சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில்கூட மண் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது மகாபாதகம் அல்லவா? இதற்கெல்லாம் விடிவு காண வேண்டும் என்பதற்காகத்தான் டெசோ மாநாடு நடைபெறுகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- பணியாற்றும் தகுதி இருந்தால் மனைவியிடம் இருந்து கணவன் ஜீவனாம்சம் கோர முடியாது: உயர் நீதிமன்றம்
- ரெய்னா அதிரடி; இறுதிச்சுற்றில் சூப்பர் கிங்ஸ்
- சென்னையில் தொழில் அதிபர் தற்கொலை : குடும்பத்தாரும் மரணம்
- திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்கள் திடீர் மயக்கம்
- தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ.248 குறைந்தது
- புற்று - முற்றவிடக் கூடாது!
கருத்தை பதிவு செய்க