சினி மினி
By
First Published : 06 May 2012 12:00 AM IST
பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்று வித்தியாசமான கேம் ஷோ ஒன்றை உருவாக்கி அந்த நிகழ்ச்சியை நடத்த அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கோடிகளில் சம்பளம் தருகிறோம் எனக் கூறியும் "இந்த கேம் ஷோவெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது' என மறுத்துவிட்டார்.
நடிகை லாரா தத்தா இப்போது ஒரு பெண் குழந்தைக்குத் தாய். ஆனாலும் அவரை சில திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் நடிக்க சிலர் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் ""இனி நான் படத் தயாரிப்பில் ஈடுபடப்போகிறேன். நடிப்பது பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது'' என்று பதில் சொல்லி வருகிறார் லாரா தத்தா
கடந்த ஆண்டு எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இசையமைக்க சம்மதிக்காத ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ஆண்டு ரஜினியின் கோச்சடையான், மணிரத்னத்தின் கடல், தனுஷின் புதிய படம், விஜய்யின் யோஹன், கெüதம் மேனனின் தொலைக்காட்சித் தொடர் என ஆறு புதிய புராஜெக்டுகளுக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
நிரஞ்சனா எழுதிய "நினைவுகள் அழிவதில்லை' என்ற நாவலை மையமாக வைத்து அதே பெயரில் ஒரு திரைப்படம் உருவாகிறது. ஆங்கிலேயர்கள் அபகரித்த விவசாய நிலங்களை மீட்க போராடிய இளைஞர்களைப் பற்றிய இந்த உண்மைக் கதையை புதியவர் பகத்சிங் கண்ணன் இயக்குகிறார். நாடக நடிகர்கள், சிற்றிதழ் எழுத்தாளர்கள், பதிப்பகத்தார்கள் ஆகியோர் செய்த நிதியுதவி மூலம் இந்தப் படம் உருவாகிறது.
நடிகைகளுக்கு திருமணமாகி குழந்தையும் பிறந்துவிட்டால் பெரிய அளவில் மார்க்கெட் இருக்காது. விளம்பர வாய்ப்புகளும் குறைந்துவிடும். ஆனால் இந்த விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் போல மிகச் சில நடிகைகள் மட்டும் விதிவிலக்கு போலும். மும்பையைச் சேர்ந்த பிரபல நகைக்கடை நிறுவனம் ஒன்று ஐஸ்வர்யா ராயைத் தங்களது விளம்பரத் தூதராக இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. சம்பளம் ரூ.20 கோடி மட்டுமே!
கமல்ஹாசனின் "விஸ்வரூபம்' படத்தில் கிராஃபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகள் மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தும் என்கிறது பட யூனிட். ஸ்பைடர்மேன் 3, லார்டு ஆஃப் த ரிங்ஸ், க்ளிக் போன்ற ஹாலிவுட்டின் பிரமாண்டமான படங்களில் பணியாற்றிய குழுதான் இந்தப் படத்திலும் பணியாற்றியிருக்கிறது. கெüரவமிக்க விஷுவல் எஃபக்ட்ஸ் சொசைட்டியின் தலைமை உறுப்பினராக உள்ள மதுசூதனன் மேற்பார்வையில் விஷுவல் எஃபக்ட்ஸ் பணிகள் நடைபெற்றுள்ளன.
ஷங்கர் புதிய கதை விவாதத்தில் அமர்ந்தால் அவருடைய உதவியாளர்கள், ஏற்கெனவே அவர் எடுத்து வெற்றியடைந்த ஊழல் பற்றிய கதைகளையே உல்டா செய்து கூறுகிறார்களாம். அதனால் ஒரு புதிய கதை விவாதக் குழுவை உருவாக்க முடிவெடுத்துள்ளார்.
-மனோஜ் கிருஷ்ணா
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- பணியாற்றும் தகுதி இருந்தால் மனைவியிடம் இருந்து கணவன் ஜீவனாம்சம் கோர முடியாது: உயர் நீதிமன்றம்
- சென்னையில் தொழில் அதிபர் தற்கொலை : குடும்பத்தாரும் மரணம்
- திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்கள் திடீர் மயக்கம்
- தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ.248 குறைந்தது
- புற்று - முற்றவிடக் கூடாது!
- கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன், ஸ்ருதிஹாசன் நெருக்கம்?
கருத்தை பதிவு செய்க