பெங்களூர், செப்.16: பெங்களூரில் இருந்து திருச்சிக்கு புதிய பேருந்து சேவையை கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் (கேஎஸ்ஆர்டிசி( அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒசூர், சேலம், நாமக்கல் வழியாக பெங்களூர்-திருச்சி இடையே குளிர்சாதன வசதியில்லாத படுக்கை வசதி கொண்ட பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருந்து தினமும் இரவு 10.05 மணிக்கு புறப்படும் பேருந்து, அதிகாலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும். இதேபோல், தினமும் இரவு 9.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் பேருந்து, அதிகாலை 4.30 மணிக்கு பெங்களூர் வந்தடைகிறது.படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை பெங்களூர்-சென்னை, திருச்சி, மதுரை, கோயமுத்தூர், பாலக்காடு, கண்ணனூர், மந்திராலயா, ஹைதராபாத், சாகர் இடையே இயக்கும் திட்டம் உள்ளது. இது தவிர, மைசூர்-சென்னை, திருப்பதி, மங்களூர், பெல்காம், பெல்லாரி மங்களூர்-குந்தாபுரா, பெங்களூர் இடையே படுக்கைவசதி பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 7760990562, 7760990561, 22870099, இணையதள முன்பதிவுகளுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்ழ்ற்ஸ்ரீ.ண்ய்-ஐ அணுகலாம். 30 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இணையதளம் புதுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஊழியர் கத்தியால் குத்திக் கொலை
பெங்களூர், செப்.16: பெங்களூர் ஆடுகோடி பகுதியில் வசித்து வந்தவர் மித்திலு (38). பெங்களூர் மாநகராட்சி ஜெயநகர் அலுவலக ஊழியரான இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. வெள்ளிக்கிழமை பணிக்கு சென்ற அவர் அலுவல் விஷயமாக ஜே.சி.நகர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போதுஅவரை வழிமறித்த 4 பேர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்தார். கலாசிபாளையா போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.