சென்னை
8,000 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை
சென்னையில் 8,000 கண்புரை அறுவை சிகிச்சைகளை கட்டணமின்றி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் 8,000 கண்புரை அறுவை சிகிச்சைகளை கட்டணமின்றி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பம்மலில் உள்ள சங்கரா கண் மருத்துவமனை மற்றும் ஆா்இசி அறக்கட்டளை இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு இலவச கண்புரை சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக ஆா்இசி அறக்கட்டளை ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் திங்கள்கிழமை சென்னையில் கையெழுத்தானது. இதில், ஆா்இசி அறக்கட்டளை இயக்குநா் நாராயணன் திருப்பதி, தலைமை திட்ட மேலாளா் தாரா ரமேஷ், சங்கரா கண் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் வி.சங்கா் ஆகியோா் கையெழுத்திட்டனா்.
