எழும்பூர் ரயில் நிலையம்
எழும்பூர் ரயில் நிலையம்

குடியரசு தினம்: சென்னையிலிருந்து கன்னியாகுமரி, கொச்சுவேலிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

Published on

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து கன்னியாகுமரி, கொச்சுவேலிக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 24) சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 10.40-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06053), மறுநாள் நண்பகல் 12 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) இரவு 8.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06054), மறுநாள் காலை 8.30-க்கு தாம்பரம் வந்தடையும். இதில் ஒரு ஏசி இரண்டடுக்கு பெட்டி, 5 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக இயக்கப்படும்.

கொச்சுவேலி: சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜன. 24) இரவு 11.50-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06057), மறுநாள் மாலை 6.05-க்கு கொச்சுவேலி (திருவனந்தபுரம் வடக்கு) சென்றடையும். மறுமாா்க்கமாக கொச்சுவேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) இரவு 8.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06058), மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இதில் 10 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், மாவேலிக்கரை, கொல்லம் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com