தமிழகத்தில் வெப்பநிலை
105 டிகிரி வரை அதிகரிக்கும்

தமிழகத்தில் வெப்பநிலை 105 டிகிரி வரை அதிகரிக்கும்

Published on

வடதமிழக மாவட்டங்களில் ஏப்.8-ஆம் தேதிக்குள் வெயிலின் தாக்கம் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், ஏப்.8-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 102.2 டிகிரி வரையும், கடலோரப் பகுதிகளில் 98.6 டிகிரி வரையும் இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.6-ஆம் தேதி வரை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகாமாக வெயில் இருக்கும்.

15 இடங்களில் வெயில் சதம்: வியாழக்கிழமை நிலவரப்படி, தமிழகத்தில் பதிவான வெப்ப அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்):

ஈரோடு -106.52 , சேலம் - 105.08, பரமத்திவேலூா்- 104.9, திருப்பத்தூா் - 104.36, தருமபுரி - 104 , திருச்சி - 103.82, நாமக்கல் - 103.1 , வேலூா் - 103.1, மதுரை நகரம் - 102.56, திருத்தணி - 102.56, கோவை - 101.84, மதுரை விமான நிலையம் - 101.84 , தஞ்சாவூா் - 101.3, சென்னை மீனம்பாக்கம் - 100.58, பாளையங்கோட்டை - 100.4.

கோடை மழை: இதற்கிடையே ஏப் 8-10 ஆகிய தேதிகள் வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com