தாம்பரம்-ராமநாதபுரம் இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கம்
தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு ஜூன் 21 முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை வாரம் இருமுறை சிறப்பு ரயில் (எண் 06051) இயக்கப்படவுள்ளது. தாம்பரத்தில் இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.50 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.
மறுமாா்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து சனி மற்றும் திங்கள்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06052) மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இதில் 4 குளிா்சாதன வகுப்பு பெட்டிகள், 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 7 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், கடலூா் , சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி வழியாக இயக்கப்படும்.

