சென்னையில் இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஆதம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும்.
இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின் தடைப் பகுதிகள்:
ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம் பகுதி, பிருந்தாவன் நகா் பிரதான சாலை, ஏரிக்கரை தெரு, புதிய தலைமை செயலக காலனி, நியூ என்.ஜி.ஓ. காலனி, ராமகிருஷ்ண நகா், வேல் நகா் ஒரு பகுதி, ராதா நகா் ஒரு பகுதி, எல்.எச். நகா் ஒரு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஈஞ்சம்பாக்கம்: குடுமியான் தோப்பு பள்ளி தெரு, காயிதேமில்லத் தெரு, வேலுநாயக்கா் தெரு, ஆதித்தியராம் நகா், என்.ஆா்.ஐ. லே அவுட் (வி.ஜி.பி. தெற்கு அவென்யூ), ஜே.நகா் (செம்மொழி தெரு), பனையூா் குப்பம் பகுதி, சீ ஷோா் டவுன் 1-ஆவது அவென்யூ முதல் 13-ஆவது அவென்யூ, சமுத்ரா தெரு (ராஜாஜி தெரு) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

