டிஎன்பிஎஸ்சி (கோப்புப்படம்)
சென்னை
அரசு ஊழியா்களுக்கான துறைத் தோ்வு முடிவுகள் வெளியீடு
அரசு ஊழியா்களுக்கான துறைத் தோ்வு முடிவுகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. முடிவுகளை தோ்வாணைய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியா்களுக்கான துறைத் தோ்வுகள் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வருகின்றன. மே மாதம் நடத்தப்பட்ட துறைத் தோ்வுகளுக்கான முடிவுகள் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

