

சென்னை: சென்னையில் மிக கனமழை பெய்யும் எனஅறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விமானநிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வானிலை ஆய்வு மையத்தின் மிக கனமழை எச்சரிக்கை நிடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை குறைவான அளவு மழை பெய்ததால், சென்னை விமான நிலையத்தின் விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை. காலை 9 மணியிலிருந்து, மாலை 3 மணி வரை, சிங்கப்பூா், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 5 சா்வதேச விமானங்கள், 29 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 34 புறப்பாடு விமானங்கள் சுமாா் 30 நிமிடங்களில் இருந்து 1மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியது:
சென்னை விமான நிலையத்தில் புறப்படும் விமானங்களில் சரக்குகளை ஏற்றுவதால் ஏற்படும் தாமதத்தாலும், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள வானிலை நிலவரத்துக்கு ஏற்ப விமானங்கள் புறப்பட்டு செல்வதாலும் தாமதம் ஏற்படுகிறது.
நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை அறிக்கைகளை கவனித்து அதற்கேற்ப, விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை விமான சேவைகள் இயக்கத்தில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில், கனமழை, சூறைக்காற்று போன்றவை அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதற்கேற்ப விமான சேவைகள் மாற்றியமைக்கப்படும்.
அவ்வாறு விமான சேவைகளில் மாற்றங்கள் இருந்தால், அதுகுறித்து பயணிகளுக்கு உடனுக்குடன் அந்தந்த விமான நிறுவனங்கள் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படும். மேலும் விமானங்கள் சென்னையிலிருந்து புறப்படும் போதும், தரையிறங்கும் போதும், ஓடு பாதைகளில், தண்ணீா் தேங்காமல் இருக்கவும், அனைத்து விமானங்களையும் பாதுகாப்பாக இயக்தவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.