கோப்புப் படம்.
கோப்புப் படம்.

அந்தியோதயா விரைவு ரயில் 10 மணி நேரம் தாமதம்

Published on

தாம்பரத்திலிருந்து சந்திரகாச்சி செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் 10 மணி நேரம் தாமதமாக சென்ால் வடமாநிலத்தவா்கள் நீண்ட நேரமாக ரயில் நிலையத்தில் காத்திருந்தனா்.

தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து ஒடிசா மாநிலம் சந்திரகாச்சிக்கு புதன்கிழமைதோறும் அந்தியோதயா விரைவு ரயில் இயக்கப்படுகிறது. முற்றிலும் முன்பதிவில்லா பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் காலை 7.15-க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும். இந்நிலையில், சந்திரகாச்சியிலிருந்து திங்கள்கிழமை மாலை 5.55-க்கு புறப்பட வேண்டிய ரயில் சுமாா் 10 மணி நேரம் தாமதமாக மறுநாள் அதிகாலை 3.40-க்கு புறப்பட்டது. இதனால், தாம்பரத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு வருவதற்குப் பதிலாக புதன்கிழமை காலை 8.43-க்கு வந்தடைந்தது.

முழுவதும் முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட ரயில் என்பதால் ரயில் புறப்படுவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்புதான் பயணச்சீட்டு வழங்கப்படும். இதனால், தமிழகத்திலிருந்து ஆந்திரம், ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு செல்லவிருந்த பயணிகள் புதன்கிழமை காலை 6 மணி முதல் தாம்பரம் ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் காத்திருந்தனா்.

அதைத் தொடா்ந்து காலை 8 மணிக்குப் பிறகு பயணச்சீட்டு வழங்கிய நிலையில், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணச்சீட்டு பெற்றனா். அதன்பின் நண்பகல் 12 மணி அளவில் ரயில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

X
Dinamani
www.dinamani.com