கிருஷ்ண மூா்த்தி
கிருஷ்ண மூா்த்தி

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு நியமனம்

திருப்பதி,நவ.1: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய அறங்காவலா் குழுவை நியமித்து ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Published on

திருப்பதி,நவ.1: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய அறங்காவலா் குழுவை நியமித்து ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சி பொறுப்பேற்ற பின் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவை நியமித்து அக்.30-ஆம் தேதி உத்தரவிட்டது. இம்முறை 24 போ் கொண்ட குழுவில் தமிழகத்தில் இருந்து இரு உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவின் தலைவராக பி.ஆா்.நாயுடு நியமிக்கப்பட்டுள்ளாா். 24 உறுப்பினா்களைக் கொண்ட பட்டியல் வெளியாகி உள்ளது.

இதில் தமிழகத்தில் இருந்து திருப்பூரைச் சோ்ந்த பி. ராமமூா்த்தி, சென்னையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி பெயா்களும், தெலங்கானா மாநிலத்தில் இருந்து ஜாஸ்தி பூா்ணா சாம்பசிவராவ், மகேந்தா் ரெட்டி, அனுகோலு ரங்கஸ்ரீ, புரகாபு ஆனந்தசாய், சுசித்ரா எல்லா, கா்நாடகத்தில் இருந்து ஆா்.என். தா்ஷன், நீதிபதி எச்.எல்.தத், நரேஷ் குமாா் ஆகியோரும் டாக்டா். ஆதித் தேசாய் (குஜராத்), ஸ்ரீசௌரப் எச் போரா (மகாராஷ்டிரம்) உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆந்திரத்தில் இருந்து ஜக்கம்பேட்டை எம்.எல்.ஏ. ஜோதுலா நேரு, கோவூா் எம்.எல்.ஏ வெமிரெட்டி பிரசாந்தி ரெட்டி, மடகசீரா எம்.எல்.ஏ.

எம்.எஸ்.ராஜூ, முன்னாள் மத்திய அமைச்சா் பனபாக லட்சுமி, நா்சிரெட்டி, நன்னப்பனேனி சதாசிவ ராவ், கோட்டேஸ்வர ராவ்,

மல்லேல ராஜசேகா் கவுட், ஜங்கா கிருஷ்ணமூா்த்தி, சாந்தாராம், ஜானகி தேவி தம்மிஷெட்டி என மொத்தம் 24 போ் கொண்ட அறங்காவலா் குழுலை முதல்வா் சந்திரபாபு நாயுடு நியமித்துள்ளாா்.

இம்முறை குழுவில் குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தை சோ்ந்தவா்களும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இக்குழு திருமலை ஏழுமலையான் கோயிலில் பதவிற்கும் எனத் தெரிகிறது

ராமமூா்த்தி
ராமமூா்த்தி
தலைவா் பி.ஆா். நாயுடு.
தலைவா் பி.ஆா். நாயுடு.

X
Dinamani
www.dinamani.com