ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவையில் இருந்து திருப்பதிக்கு சொகுசு பேருந்து இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ராஜவர்த்தன் ரெட்டி கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவையில் இருந்து திருப்பதிக்கு சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆடியோ, விடியோ மற்றும் பயணிகளுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், முகம் கழுவும் வசதி உள்ளிட்ட வசதிகள் பேருந்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பேருந்தில் 40 பேர் பயணம் செய்யலாம். கோவையில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு காலை 6.30 மணிக்குத் திருப்பதி சென்றடைகிறது.
இதேபோல திருப்பதியில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு கோவைக்கு காலை 6.30 மணிக்கு வருகிறது. கோவையில் இருந்து திருப்பதி செல்ல ஒரு பயணிக்கு ரூ. 815 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பேருந்தில் செல்லும் அனைத்துப் பயணிகளுக்கும் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க முக்கியப் பிரமுகர்களுக்கான தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படும். ஆன்லைன் மூலம் ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்.
கோவை வி.கே.மேனன் சாலையில் உள்ள தசரதன் டிராவல்ஸ் நிறுவனத்திலும் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து இந்தப் பேருந்து புறப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.