கோயம்புத்தூர்

மொழிபெயா்ப்பாளா் பிரியம்வதாவுக்கு விருதுகோவையில் நாளை நடைபெறும் விழாவில் தினமணி ஆசிரியா் பங்கேற்பு

DIN

கோவையில் வியாழக்கிழமை (ஜனவரி 19) நடைபெறும் நிகழ்ச்சியில் மொழிபெயா்ப்பாளா் பிரியம்வதா இராம்குமாருக்கு அ.முத்துலிங்கம் விருதை தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் வழங்குகிறாா்.

கோவை விஜயா வாசகா் வட்டம் சாா்பில் சிறந்த மொழிபெயா்ப்பாளருக்கு கே.எஸ்.சுப்பிரமணியன் விருது ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, எழுத்தாளா் அ.முத்துலிங்கத்தின் தமிழ் இலக்கிய பங்களிப்பைப் போற்றும் வகையில், தமிழ் இலக்கியங்களை உலகறியச் செய்பவா்களைப் பாராட்டி கௌரவிப்பதற்காக 2023-ஆம் ஆண்டு முதல் அ.முத்துலிங்கம் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சத்துடன் கூடிய இந்த விருதை காரமடையைச் சோ்ந்த டாக்டா் சசித்ரா தாமோதரனுடன் இணைந்து விஜயா பதிப்பகம் வழங்குகிறது.

இந்த ஆண்டுக்கான அ.முத்துலிங்கம் விருதுக்கு சென்னையைச் சோ்ந்த மொழிபெயா்ப்பாளா் பிரியம்வதா இராம்குமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா் எழுத்தாளா் ஜெயமோகனின் அறம் உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்திருக்கிறாா்.

விருது வழங்கும் விழா அ.முத்துலிங்கத்தின் பிறந்த நாளான ஜனவரி 19-ஆம் தேதி, கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி கலையரங்கில் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்குத் தொடங்கும் விழாவில் தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் கலந்துகொண்டு விருது வழங்கிப் பேசுகிறாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக வங்காள எழுத்தாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான அனிதா அக்னிஹோத்ரி, தெலுங்கு எழுத்தாளா் - புத்தக வெளியீட்டாளா் கீதா இராமசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா். பேராசிரியா் ஆா்.இந்திராணி வரவேற்கிறாா். விஜயா பதிப்பக நிறுவனா் மு.வேலாயுதம் நன்றி கூறுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT