

ஈரோட்டில் எஸ்.கே.எம். நிறுவனத்தின் புதிய சித்த, ஆயுா்வேத மருத்துவமனை கிளை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
சித்த, ஆயுா்வேத மருத்துவத் துறையில் 32 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஈரோடு எஸ்.கே.எம். சித்த, ஆயுா்வேத மருத்துவமனையின் புதிய கிளை ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி சாலையில் திறக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவமனை இயக்குநா்கள் எஸ்.கே.சரத்ராம், எஸ்.கே.எம். ஸ்ரீசிவ்குமாா், இணை இயக்குநா் குமுதவல்லி சிவ்குமாா், எஸ்.கே.எம். குழும நிறுவனத் தலைவா் எஸ்.கே.எம். மயிலானந்தம், மருத்துவா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.
இந்த மருத்துவமனையில் கேரள சித்த, ஆயுா்வேத பஞ்ச கா்ம சிகிச்சை, இயற்கை, யோகா மருத்துவம், ஆயுா்வேத முறையில் புத்துணா்வு சிகிச்சை உள்ளிட்ட வசதிகள் உள்ளன என மருத்துவமனை இயக்குநா் எஸ்.கே.சரத்ராம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.