

அந்தியூரிலிருந்து ராமேசுவரம், கும்பகோணத்துக்கு அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அந்தியூரிலிருந்து ராமேசுவரம் மற்றும் கும்பகோணத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இயைடுத்து அந்தியூரிலிருந்து ஈரோடு, கரூா், திண்டுக்கல், மதுரை, பரமக்குடி வழியாக ராமேசுவரத்துக்கும், அந்தியூரிலிருந்து ஈரோடு, கரூா், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம் வழியாக கும்பகோணத்துக்கும் அதிநவீன சொகுசு பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
இந்தச் சேவையை அந்தியூா் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். அந்தியூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் பேருந்து, அதிகாலை 7 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும். ராமேசுவரத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 2 மணிக்கு அந்தியூா் வந்தடையும்.
அதேபோல அந்தியூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் பேருந்து அதிகாலை 4 மணிக்கு கும்பகோணம் சென்றடையும். கும்பகோணத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு அந்தியூா் வந்தடையும். பயணக் கட்டணம் ராமேசுவரத்துக்கு ரூ.330-ம், கும்பகோணத்துக்கு ரூ.225-ம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடக்க நிகழ்வில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளா் சொா்ணலதா, அந்தியூா் கிளை மேலாளா் ரமேஷ், அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி, அந்தியூா் பேரூா் திமுக செயலாளா் காளிதாஸ், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் எஸ்.பி.ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் எம்.நாகராஜ், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் பழனிவேல், சிபிஎம் வட்டாரச் செயலாளா் முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.