

வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் மற்றும் இரு மகன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டூயுடையார் பாளையம் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பொண்ணுவேல். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு கவின் (21) மற்றும் நடனாலயா (17) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், வசந்தி அடிக்கடி செல்போனில் பேசுவது குறித்து கணவன் பொண்ணுவேல் மற்றும் மகன்கள் அவரிடம் கேட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட, வசந்தியை மூவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த வசந்தி மயங்கியுள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வசந்தியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த ஏத்தாப்பூர் போலீசார் பொண்ணுவேல் மற்றும் இரு மகன்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.