மதுரை - திருப்பதி - மதுரை வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகம்

மதுரை, மார்ச் 31: மதுரை- திருப்பதி- மதுரை வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, மதுரையில் இருந்து வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.  வண்டி எண்: 16780 மதுரை- திருப்பதி வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் ரயில
Updated on
2 min read

மதுரை, மார்ச் 31: மதுரை- திருப்பதி- மதுரை வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, மதுரையில் இருந்து வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

 வண்டி எண்: 16780 மதுரை- திருப்பதி வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மதுரையிலிருந்து இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை வியாழக்கிழமை மதுரையில் இருந்து தொடங்கியது.

 இந்த ரயில் திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காட்பாடி வழியாகச் செல்லும்.

 வண்டி எண்: 16779 திருப்பதி-மதுரை வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருப்பதியில் இருந்து 1.4.2011 முதல் இயக்கப்படும். இந்த ரயில் தாற்கலிகமாக காட்பாடி, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் திருச்சி வழியாக மதுரை வருகிறது.

 வண்டி எண்: 16780 மதுரை-திருப்பதி வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் 31.3.2011 முதல் 2.6.2011 வரையும், வண்டி எண்: 16779 திருப்பதி- மதுரை வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் 1.4.2011 முதல் 3.6.2011 வரை மட்டும் கீழ்க்கண்ட ரயில் நிலையங்களில், கொடுக்கப்பட்டுள்ள விரிவான நேரத்தின்படி நின்று செல்லும்.

 வண்டி எண்: 16780 மதுரை- திருப்பதி வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும். திண்டுக்கல்லுக்கு இரவு 7.45 மணிக்கு வந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு, திருச்சியை இரவு 9.10 மணிக்கு சென்றைடயும். அங்கிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும். இந்த ரயில் தஞ்சாவூருக்கு இரவு 9.58 மணிக்கு வந்து, இரவு 10 மணிக்கு புறப்படும். திருப்பாதிரிப்புலியூருக்கு அதிகாலை 12.34 மணிக்கு வந்து 12.35 மணிக்கு கிளம்பும். விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 1.55 மணிக்கு சென்று 2.05 மணிக்கு புறப்படும்.

 வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு காலை 7.38 மணிக்குச் சென்று காலை 7.40 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். காட்பாடி சந்திப்புக்கு காலை 8.13 மணிக்கு சென்றடைந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

 பாகலா ரயில் நிலைய சந்திப்புக்கு காலை 9.13 மணிக்கு சென்றடைந்து அங்கிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

 இந்த ரயில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.20 மணிக்கு திருப்பதியை சென்று சேரும்.

 வண்டி எண்: 16779 திருப்பதி- மதுரை வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பதியில் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு, பாகலா சந்திப்புக்கு பிற்பகல் 2.13 மணிக்கு வந்து, 2.14 மணிக்கு புறப்படும்.

 பின்னர், காட்பாடி ரயில் சந்திப்புக்கு பிற்பகல் 3.40 மணிக்கு வந்து மாலை 4.05 மணிக்கு புறப்படும். விழுப்புரத்துக்கு இரவு 9.40 மணிக்கு வந்தடைந்து, இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தை இரவு 10.38 மணிக்கு சென்றடைந்து அங்கிருந்து 10.40 மணிக்கு புறப்படும்.

 இந்த ரயில் தஞ்சாவூருக்கு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு சென்றடைந்து, அதிகாலை 2.02 மணிக்கு புறப்படும். திருச்சிக்கு அதிகாலை 3.15 மணிக்கு வந்து 3.25 மணிக்கு புறப்படும். திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 5.45 மணிக்கு வந்தடைந்து அங்கிருந்து அதிகாலை 5.50 மணிக்கு புறப்படும். மதுரைக்கு சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் காலை 7.50 மணிக்கு வந்து சேரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com