திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பொய்த்துப் போன நிலையில் மீன் பாசி குத்தகையை நீட்டித்துத் தர மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்டத்தில் ஊராட்சி குளங்கள், மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை குளங்கள் பல உள்ளன. இந்த குளங்களில் மீன் வளர்ப்போர் 5 ஆண்டுகளுக்கு அரசு நிர்ணயம் செய்யும் குத்தகை தொகையை (மீன் பாசி) செலுத்தி மீன் வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேல் மழை பெய்யாததால் குளங்களை குத்தகைக்கு எடுத்த உள்நாட்டு மீன்வளர்ப்பு தொழிலாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட மீன்பிடி மற்றும் மீன் விற்பனை தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் மனோகரன், மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை: கடந்த 2 ஆண்டுகளாக மீன் தொழிலாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதால் 2017-18 ஆம் ஆண்டிற்குரிய மீன்பாசி குத்தகையை ரத்து செய்தும், 5 ஆண்டு குத்தகை காலத்தை 6 ஆண்டுகளாக நீட்டித்து தர வேண்டும். மேலும், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் மூலம் அந்த குளங்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை மூலம் மீன் வளர்ப்பு தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்யவும், தொழிலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.