திருச்சி-காரைக்குடி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம்

திருச்சி-காரைக்குடி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) முதல் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Updated on
1 min read

திருச்சி-காரைக்குடி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) முதல் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருச்சி - காரைக்குடி சிறப்பு ரயில் (06887) மற்றும் காரைக்குடி - திருச்சி சிறப்பு ரயில் (06888) முறையே ஜூலை 18 மற்றும் ஜூலை 19 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது பயணிகளின் வசதிக்காக, இந்த ரயில்களை முன்கூட்டியே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மற்றும் காரைக்குடி - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் முறையே, ஜூலை 10 மற்றும் ஜூலை 11 ஆம் தேதி முதல் இயக்கப்படும். திருச்சி - காரைக்குடி ரயில் சனிக்கிழமைகளிலும், காரைக்குடி - திருச்சி ரயில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படமாட்டாது என, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com